Monday, April 30, 2018

அலகு குத்துவதிலும் மருத்துவம் !

அறிவியலில் முன்னேற்றம் கண்ட காலகட்டத்தில் யாவருக்கும் அலகு குத்துபவர்கள் எல்லாம் அறிவில்லாதவராயும், அது சற்று காட்டு மிராண்டித்தனம் கலந்த மூடநம்பிக்கையாகவும் தான் தெரியும். நாக்கிலும்,கன்னங்களில்,தொடைகளிலும் மற்றும் முதுகுகளிலும் சதைகளை துளைத்து ஏன் தன்னைத்தானே வதைத்து கொள்கிறனர் என்பது பகுத்து அறியத் தெரியாத பகுத்தறிவாளர்களின் சிந்தனை.

அணுசக்தி நோக்கிய உலகமயமும் கண்ணுக்கு புலப்பாடா சக்தியை கண்டறியும் நோக்கில்தான் அறிவியலும் போகிறது. ஓம்சக்தி நோக்கிய பயணங்களும், அதைநோக்கித்தான் பயணிக்கிறது. அதை ஏற்க மனமில்லை என்றாலும் பரவாயில்லை, மற்றவர் உணர்வுகளை கொச்சைப்படுத்துதல் தவறு.

சரி நாம் விவரிக்க வேண்டிய  தலைப்பிற்க்குள் வருவோம், அலகு குத்துவதில் பெரிதாய் எந்த அறிவியலும் இல்லைதான் ஆனால் பெரும் மருத்துவமே உள்ளதென்றால் ஏற்பீரா? ஆம் இன்றைய அக்குபஞ்சர் முறையை ஏற்போம், காரணமே தெரியாமல் அன்றைய அலகு குத்துதலை பழிப்போம். ஆனால் இரண்டின் நோக்கமும் ஒன்றுதான் என்பது நிதர்சனமான உண்மை, உடலின் சதை பகுதிகளில் துளையிடுவதன் மூலம் உடம்பில் உள்ள வாயு மற்றும் காற்றை வெளியேற்றும். இதனால் வாயுக்களால் ஏற்படும் சதைப் பகுதி வீக்கம்,நெஞ்சில் படபடப்பு,முகம் கை மற்றும் கால்களில் அடிக்கடி வேர்ப்பது,குடல் வீங்கி வலி வருவது போன்ற எல்லா வற்றையும் தடுக்கலாம். அது மட்டுமில்லாது வாயு அழுத்தம் அதிகரித்தால் இதயப்பகுதியில் குத்துவது போன்ற வலியையும் ஏற்படுத்தும் அதை இருதய அடைப்பு எனும் Heart attack என பயந்தவர் பலருண்டு. இவற்றிற்கு எல்லாம் தீர்வாய் அமைந்ததுதான் அன்றைய அலகு குத்துதல் வழக்கம். நோய்களில் தாக்குதல் அதிகமான இக்காலகட்டத்திற்கு தேவையான ஆதி மருத்துவங்கள் அழிந்து கொண்டே வருகிறது, அதில் அதிகம் பங்கு வகிப்பது நாம் தான்.

காது குத்துவதும், மூக்கு குத்துவதற்கும் இதுவும் ஒரு காரணம். பெரும்பாலும் இப்பொழுது மூக்குத்தி அணியும்பெண்கள் கணிசமாக குறைந்து வருகின்றர். அதுவும் மூக்குத்தி என்பது அழகுப் பொருளாகவே பயன்படுத்தப் படுகின்றன. இருப்பினும் மூக்குத்தி குத்திய பெண்கள் பேரழகுதான் அது ஒருபுறம் இருக்கட்டும். மூக்குத்தி குத்துவதன் பயன் என்ன என்றால், நெற்றிப்பகுதியிலிருந்து சிறு சிறு துவாரங்கள் கொண்ட நரம்புகள் மரத்தின் வேர்கள் போல படர்ந்து இருக்கும், அவைகளின் ஒரு பகுதி மூக்கின் சதைகளின் இடையே படர்ந்திருக்கும். அங்கு துவாரமிட்டு தங்க மூக்குத்தியை அணிந்தால் உடலின் வெப்பத்தை அது உறிஞ்சிகொள்ளும். ஆம் தங்கம் வெப்பத்தை உறிஞ்சி உடலை குளிர்ச்சியாகவும் மனதை நிம்மதியாகவும் வைத்துக்கொள்ளும்.

இப்போதெல்லாம் தங்கச் சங்கிலி அணிந்து செல்லும்போதுதான் மனது படபடக்கிறது.

(வேறு ஏதேனும் உங்களுக்கு தெரிந்த மூட நம்பிக்கைகளை கருத்து பொட்டியில் கொட்டவும் வரும் பதிவுகளில் விளக்கம் தரப்படும்)

4 comments: